இலங்கை பிரதான செய்திகள்

ஆவா குழுவின் உளவாளிக்கு விளக்கமறியல்: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

ஆவா குழுவின் உளவாளி என கோப்பாய் பொலிசாரினால் கைது செய்யப்பட்ட இளைஞனை எதிர்வரும் 06ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிமன்று உத்தரவிட்டு உள்ளது.

ஆவா குழுவுடன் சேர்ந்து இயங்குபவரும் அக்குழுவின் உளவாளியும் எனும் சந்தேகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கோப்பாய் பொலிசாரினால் யாழ்.பிரவுன் வீதியை சேர்ந்த கஜபாலசிங்கம் நிதர்சன் (வயது 17) எனும் இளைஞர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட குறித்த இளைஞனிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த கோப்பாய் பொலிசார் இன்றைய தினம் புதன் கிழமை யாழ்.நீதிவான் முன்னிலையில் முற்படுத்தினார்கள்.

நீதிவான் குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 06ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். குறித்த இளைஞனே யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் பஸ்சுக்கா காத்திருந்த வேளை வெள்ளை வானில் கடத்தப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் குறித்த இளைஞன் கடத்தப்படவில்லை எனவும் தாமே கைது செய்தோம் எனவும் கோப்பாய் போலீசார் தெரிவித்து இருந்தனர். என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.