இலங்கை பிரதான செய்திகள்

ராஜாங்க அமைச்சர் சுஜீவ ஜனாதிபதியை விமர்சனம் செய்தமை அரசியல் சாசன மீறலாகும் :


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ராஜாங்க அமைச்சர் சுஜீவ  சேனசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விமர்சனம் செய்தமை அரசியல் சாசன மீறலாகும் என பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சுஜீவ சேனசிங்க ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கின்றார் எனவும், ராஜாங்க அமைச்சராக கடமையாற்றி வருகின்றார் எனவும் தெரிவித்துள்ள அவர் இவ்வாறான ஓர் பின்னணியில் அவர் எவ்வாறு ஜனாதிபதியை விமர்சனம் செய்ய முடியும் என  கேள்வி எழுப்பியுள்ளார். இவ்வாறு ஜனாதிபதியை விமர்சனம் செய்வதானது நிலையியல் கட்டளைகளையும், அரசியல் சாசனத்தையும் விமர்சனம் செய்யும் வகையில் அமைந்துள்ளதாகவும் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap