Home இந்தியா சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதி :

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதி :

by admin

தமிழகத்தின் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதியாக    சத்ருஹனா புஜாரி இன்று பதவியேற்றுள்ளார். அவருக்கு தலைமை நீதிபதியான இந்திராபானர்ஜி சத்தியப்பிரமாணம் செய்து வைத்தார்.

பாரம்பரியமிக்க சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகளை படித்து வழக்கறிஞர் தொழிலை ஆரம்பித்து, அதே நீதிமன்றத்திற்கு தான் நீதிபதியாக வந்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக நீதிபதி சத்ருஹனா புஜாரி தன் ஏற்புரையில் கூறினார்.

இதேவேளை சென்னை உயர்நீதிமன்றம், நீதித்துறைக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக உள்ளது எனவும், இந்த உயர்நீதிமன்றம் வழங்கிய பல தீர்ப்புகள், இந்தியாவின் பிற நீதிமன்றங்களில் சுட்டிக்காட்டப்படுவதாகவும் நீதிபதி சத்ருஹனா புஜாரி  குறிப்பிட்டார்.

நீதிபதி சத்ருஹனா புஜாரி பதவியேற்றதையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 54ஆக அதிகரித்துள்ளது. எவ்வாறெனினும் நீதிமன்றத்தில் 21 நீதிபதி வெற்றிடங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More