குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அண்மையில் கட்சி மாறிய வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரனுக்கு சக உறுப்பினர்கள் இன்றைய தினம் கைலாகு கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். வடமாகாண சபையின் 110ஆவது அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக்கட்டத்தில் நடைபெற்ற போது காலை சபை அமர்வு ஆரம்பமாக முன்னர் சபையில் இருந்த ரவிகரனுக்கு சக ஆளும் கட்சி உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
வடமாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினரான து . ரவிகரன் ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியில் தேர்தலில் போட்டியிட்டு வடமாகான சபை உறுப்பினரானார். கடந்த வாரம் தமிழரசு கட்சி கட்சியுடன் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டார். அந்நிலையில் இன்றைய தினம் சபையில் சக உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment