குளோபல் தமிழ் செய்தியாளர்
கிளிநொச்சி நகரம், ஆனந்தபுரம் கிழக்கு மேற்கு, பரவிப்பாஞ்சான் மற்றும் இரத்தினபுரம் பகுதிகளில் வசிக்கும் மாவீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சி கிருஷ்ணர் கோவில் மண்டபத்தில் இடம்பெற்றது.
ஆசிரியர் சுந்தரலிங்கம் லோகேஷ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை, கவிஞர் தீபச்செல்வன், நாடக கலைஞர் பாலா, தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் வேழமாலிகிதன் உள்ளிட்டோர் நினைவுரை ஆற்றினர்.
இதன்போது மாவீரர்களின் நினைவாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இதேவேளை சர்வதேச அழுத்தத்தின் காரணமாகவே மாவீரர் தினம் அனுஷ்டிக்க இலங்கை அரசு அனுமதியளித்திருப்பதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை தெரிவித்தார்.
Spread the love
Add Comment