இலங்கை பிரதான செய்திகள்

வவுனியா கடை எரிப்பு விசாரணை முடிவின் பின்னர் கண்டனம் தெரிவிப்போம். – ப. சத்தியலிங்கம்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வவுனியாவில் முஸ்லீம் வர்த்தகரின் கடை எரிந்தமை , திட்டமிட்டு எரிக்கப்பட்டதா அல்லது விபத்தா என விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என வவுனியா மாவட்ட வடமாகாண சபை உறுப்பினர் பா. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் 110ஆவது அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவை செயலகத்தில் நடைபெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில் ,

வவுனியாவில் முஸ்லீம் வர்த்தகரின் கடை எரிந்தமை முஸ்லீம் மக்களுக்கு எதிரான வன்முறை என தீர்மானிக்க முடியாது. வவுனியா நகருக்கு அண்மையில் பள்ளி வாசலுக்கு அருகில் 14 கடைகள் முஸ்லீம் வர்த்தகர்களுக்கு சொந்தமானது. அவை அனைத்தும் வீதிகளை ஆக்கிரமித்து , சட்டவிரோதமாக அமைக்கபட்டு உள்ளன.

குறித்த கடை தொகுதிகளை அகற்றுமாறு கோரி இளைஞர்கள் சிலர் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்து இருந்தனர். அது நடைபெற்ற சில நாட்களில் கடை எரிந்தமையால் அவை குறித்த இளைஞர் குழுவால் எரிக்கப்பட்டு இருக்கலாம் எனும் சந்தேகம் எழுந்து இருந்தது.

அதேவேளை கடை எரிந்தமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் மின் ஒழுக்கு காரணமாகவும் கடை எரிந்து இருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவித்து இருந்தனர்.  அது தொடர்பில் மேலும் விசாரணைகளை முன்னெடுத்து , எரிந்த கடையில் இருந்து சில சான்றுகளை பெற்று கொழும்புக்கு பகுப்பாய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

அது குறித்து மேலதிக அறிக்கை வந்த பின்னரே கடை எரிந்தமைக்கு காரணம் மின் ஒழுக்கா அல்லது திட்டமிட்டு எரிக்கப்பட்டதா எனும் முடிவுக்கு நாம் வர முடியும் என காவல்துறையினர் ; தெரிவித்து இருந்தனர்.  எனவே குறித்த அறிக்கை வரும் வரையில் அது திட்டமிட்டு எரிக்கபட்டது எனும் முடிவுக்கு நாம் வர முடியாது. அறிக்கை வந்த பின்னர் திட்டமிட்டு எரிக்கபட்டது என்றால்  ; கண்டனத்தை பதிவு செய்வோம் என அவர்  தெரிவித்தார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers