உலகம் பிரதான செய்திகள் விளையாட்டு

காதலியை சுட்டுக் கொன்ற வழக்கில் ஒஸ்கர் பிஸ்டோரியசுக்கு 13 ஆண்டு 5 மாதங்கள் சிறை தண்டனை

காதலியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வழக்கில் தென்னாபிரிக்காவை சேர்ந்த மாற்றுத் திறனாளியான  தடகள வீரர் ஒஸ்கர் பிஸ்டோரியசுக்கு 13 ஆண்டு 5 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒஸ்கர்  கடந்த 2013-ம் ஆண்டு காதலர் தினத்தன்று தனது காதலி ரீவாவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருந்தார்.

இந்த வழக்கில் மரணம் விளைவிக்கும் குற்றம் செய்ததாக அவருக்கு கடந்த 2014-ம் ஆண்டு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஒருவருடமாக சிறையில் இருந்த அவர் பரோலில் வெளியே வந்து தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைக்கக் கோரி   தென்னாப்பிரிக்க நாட்டின்  உச்சநீதிமன்றில்  பிஸ்டோரியஸ் மேல் முறையீடு செய்திருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது திட்டமிட்ட கொலை என்று கூறியதுடன், இதுபற்றி விசாரித்து பிஸ்டோரியசுக்கு தண்டனையை உயர்த்தி வழங்கும்படி கீழ்கோர்ட்டுக்கு உத்தரவிட்டநிலையில் அவருக்கு மேற்படி தண்டனை வழங்கப்பட்டுள்ளது

ALTERNATIVE CROP
A picture taken on January 26, 2013 shows Olympian sprinter Oscar Pistorius posing next to his girlfriend Reeva Steenkamp at Melrose Arch in Johannesburg. South Africa’s Olympic sprinter Oscar “Blade Runner” Pistorius was taken into police custody on February 14, 2013, after allegedly shooting dead his model girlfriend having mistaken her for an intruder at his upscale home. AFP PHOTO / WALDO SWIEGERS (Photo credit should read WALDO SWIEGERS/AFP/Getty Images)

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.