இலங்கை பிரதான செய்திகள்

எட்கா உடன்படிக்கை தொடர்பில் இந்திய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிந்தது – பிரதமர்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய  பயணத்தினை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமொன்றினை  மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு  சென்றிருந்தார்.  எட்கா உடன்படிக்கை தொடர்பில் இந்த  பயணத்தின் போது இந்திய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிந்தது என பிரதமர் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய குடியரசுத் தலைவர், வெளிவிவகார அமைச்சர், காங்கிரஸ் கட்சித் தலைவி உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்திப்பு நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.