ஜோர்ஜியாவின் கருங்கடல் கடற்கரையில் உள்ள விடுதி ஒன்றில் தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று நள்ளிரவு அங்குள்ள லியோகிராண்ட் விடுதியின் ஒரு தளத்தில் திடீரென பற்றிய ஏனைய தளங்களுக்கும் பரவிய நிலையில் அங்கு தங்கியிருந்தவர்களும் வெளியேற்றப்பட்டனர். தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர்.
இந்தநிலையில் விபத்தில் தீக்காயம் அடைந்தும் புகையை சுவாசித்தும் பாதிக்கப்பட்ட 11 பேர் உயிரிழந்ததாகவும் 11 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த விடுதியில்தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை மிஸ் ஜோர்ஜியா அழகிப் போட்டி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment