போப் பிரான்சிஸ் மூன்று நாள் பயனமாக மியான்மருக்கு இன்று சென்றுள்ள நிலையில் கலவரம் காரணமாக பங்களாதேசுக்கு தப்பிச்சென்ற ரோஹிங்கியா முஸ்லிம் மக்களை மீள் குடியேற்றம் செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளார். ரோஹிங்கியா இன மக்களை மீள் குடியேற்றம் செய்வது தொடர்பாக அந்நாட்டின் தலைமை ஆலோசகர் ஆங் சான் சூகி மற்றும் ராணுவ தளபதி மின் ஆங் ஆகியோருடன் போப் பிரான்சிஸ் ஆலோசனை நடத்தியுள்ளார். மியான்மர் சுற்றுப்பயணம் முடிவடைந்ததும் போப் பிரான்ஸில் பங்களாதேஸ் சென்று அங்கு ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகளையும் சந்திக்கஉள்ளார்.
கடந்த ஓகஸ்ட் மாதம் மியான்மரில் ராணுவ நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து சுமார் 6 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் பங்களாதேசில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment