உலகம் பிரதான செய்திகள் விளையாட்டு

உலகின் தலைசிறந்த ரக்பி நடுவராக ஜோய் நெவில் தெரிவு


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இந்த ஆண்டுக்கான உலகின் தலைசிறந்த ரக்பி நடுவராக ஜோய் நெவில் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மொனோக்கோவில் நடைபெற்ற உலக ரக்பி விருது வழங்கும் நிகழ்வில் நெவிலின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. நெவில் உலகக் கிண்ண ரக்பி மகளிர் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் நடுவராக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நெவில், அயர்லாந்து தேசிய ரக்பி அணியின் நட்சத்திர வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது. பத்து ஆண்டுகளுக்கு மேல் நெவில், அயர்லாந்து அணியை பிரதிநிதித்துவம் செய்துள்ளார்.  2013ம் ஆண்டில் ஓய்வு பெற்றுக் கொண்டதன் பின்னர், நடுவர் பணியைத் தெரிவு செய்து கொண்டதாகவும், இந்த விருது தமக்கு பெரும் மகிழ்ச்சியையும் கௌரவரத்தையும் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது என முன்னாள் வீராங்கனை நெவில் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.