இலங்கை பிரதான செய்திகள்

நியூசிலாந்தில் இலங்கையர் ஒருவருக்கு எதிராக பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டு


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நியூசிலாந்தில் இலங்கையர் ஒருவருக்கு எதிராக பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட இலங்கையர் ஒருவர் நேற்றைய தினம் நியூசிலாந்து நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.  ஒரே வீட்டில் வசித்து வந்த காலத்தில் தம்மை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குறித்த பெண் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

40 வயதான தாரக தக்சில ரணசிங்க என்பவருக்கு எதிராகவே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 12 குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இலங்கையருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதேவேளை, பலவந்தமான அடிப்படையில் பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கையர் தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.