இலங்கை பிரதான செய்திகள்

யாழில் போதை பொருள் வியாபாரிகள் இருவர் கைது


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் யாழ்ப்பாண நகரின் பேருந்து நிலையத்துக்கு அண்மையில் வைத்து இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டனர் என காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர்.
 ‘அவர்கள் இருவரிடமும் 2 கிராம் எடையுடைய 60 பக்கெட்கள் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளன.

கந்தளாய் மற்றும் மாத்தளையைச் சேர்ந்த 37, 28 வயதுடைய  நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டனர்.
 யாழ்ப்பாணம் பிரதிப் காவல்துறைமா அதிபரின் சிறப்பு குற்றத்தடுப்பு பிரிவினரின் சுற்றுக்காவல்  நடவடிக்கையின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டனர்’ எனவும் காவல்துறையினர்    மேலும் தெரிவித்தனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.