Home உலகம் இஸ்ரேல், ஜோர்தானுக்கான புதிய தூதுவர் ஒருவரை நியமிக்க உள்ளது

இஸ்ரேல், ஜோர்தானுக்கான புதிய தூதுவர் ஒருவரை நியமிக்க உள்ளது

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இஸ்ரேல் அரசாங்கம்  ஜோர்தானுக்கான புதிய தூதுவர் ஒருவரை நியமிக்கத் தீர்மானித்துள்ளது. தற்போது கடமையாற்றி வரும் இஸ்ரேலிய தூதுவர் தொடர்பில் ஜோர்தான் அதிருப்தி வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இரு நாடுகளுக்கும் இடையில் நிலவி வரும் முரண்பாடுகளை களையும் நோக்கில் புதிய தூதுவர் நியமிக்கப்பட உள்ளார்.

குறிப்பாக கடந்த ஜூலை மாதம் தூதரக பாதுகாப்பு உத்தியோகத்தர் இரண்டு ஜோர்தான் பிரஜைகளை சுட்டுக் கொன்றிருந்தார். தற்காப்பு நோக்கில் தாக்குதல் நடத்தியதாக தூதரக பாதுகாப்பு உத்தியோகத்தர் கூறியிருந்தார். இந்த விடயத்தில் உரிய முறையில் இஸ்ரேல் தூதுவர் நடவடிக்கை எடுக்கத் தவறியதாக ஜோர்தான் குற்றம் சுமத்தி வருகின்றது. தற்போதைய தூதுவர் ஐனட் ஷீலின் (  Einat Schlein  )க்கு பதிலீடாக புதிய தூதுவர் ஒருவரை நியமிக்க இஸ்ரேல் நடவடிக்கை எடுக்க உள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More