பிரதான செய்திகள் விளையாட்டு

ஐ.பி.எல். தொடரின் நேரத்தில் மாற்றம்

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐ.பி.எல். தொடரின்  நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இரவு   8 மணிக்கு நடத்தப்படுகின்ற  இந்த ஆட்டங்கள் 7 மணிக்கு தொடங்கும் எனக் கூறப்படுகிறது.  இந்தியன் பிரிமீயர் லீக்   அடுத்த ஆண்டு 11-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ள நிலையில்    பல்வேறு மாற்றங்கள் கொண்டு வர ஐ.பி.எல். அணி உரிமையாளர்களும், பிசிசிஐ-யும்  தீர்மானித்துள்ளன.

இந்தநிலையில்   இரவு ஆட்டங்கள் 8 மணிக்கு  ஆரம்பமாகி    இரவு 12 மணியளவில் முடிவடைவதனால்   ரசிகர்களுக்கு ஏற்படும் சிரமங்களை கருத்தில் கொண்டு போட்டியை இரவு 7 மணிக்கு நடத்தலாம் என பிசிசிஐ ஆலோசனை வழங்கியுள்ளது.

இந்த ஆலோசனைகளை நேரடி ஒளிப்பரப்பு செய்யும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொண்டால் போட்டி 7 மணிக்கு  ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap