உலகம் பிரதான செய்திகள்

பாகிஸ்தானில் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தீவிரவாதிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலி :


பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இன்று முகமூடி அணிந்த தீவிரவாதிகள்  மேற்கொண்ட  துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

பல்கலைக்கழகத்துக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், புர்கா அணிந்தபடி இந்த பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்த 4 தீவிரவாதிகள் அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கிகளால்  சுட்டுள்ளனர் எனவும்  இந்த   தாக்குதலில் 13 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 15 பேர் காயமடைந்ததாகவுமதெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை  தாக்குதல் நடத்திய 4 பேரையும் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றதாகவும்  தெரிவிக்கப்படுகின்ற  நிலையில் இச்சம்பவத்துக்கு தெஹ்ரிக்-இ-தலிபான் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.  தங்களது தாக்குதலின் இலக்கு பல்கலைக்கழகம் அல்ல என்றும் அருகாமையில் உள்ள பாகிஸ்தான் உளவுத்துறை அலுவலகத்தை நடந்த முயற்சி என்றும் தெஹ்ரிக்-இ-தலிபான் வெலியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.