தேசிய சுதந்திர முன்னணியின் அரசியல் செயற்பாட்டாளரும் திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜயந்த விஜேசேக்கர இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கொண்டார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கொண்ட அவரை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி நியமித்துள்ளார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சி சார்பில் அவர் இதுவரை செயற்பாட்டு அரசியலில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதனிடையே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தளை மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பிரதி அமைச்சர் லக்ஷ்மன் வசந்த பெரேரா இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியிமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
Spread the love
Add Comment