இலங்கை பிரதான செய்திகள் பெண்கள்

‘அவளை தேர்ந்தெடுப்போம் வன்முறையை ஒழிப்போம்’


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தேர்தலில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழித்து பெண்களின் பங்களிப்பை அரசியலில் உறுதிப்படுத்தும் விதமாக வாக்காளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.

‘அவளை தேர்ந்தெடுப்போம் வன்முறையை ஒழிப்போம்’ எனும் தொனிப்பொருளில் பால்நிலை வன்முறைக்கெதிரான பதினாறுநாள் பரப்புரைச் செயற்திட்டத்தின்கீழ் இந்த தேர்தல் விழிப்புணர்வுச் செயற்பாடு யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று இடம்பெற்றது.

அரசியலில் பெண்களுக்கு சமமான வாய்ப்புக்களை வழங்குவதற்கும் தேர்தலில் போட்டியிடும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் பொருட்டு இந்த விழிப்புணர்வுச் செயற்பாடு நாடு முழுவதும் பால்நிலை வன்முறைக்கெதிரான அரச குழுமத்தின் ஒழுங்கமைப்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி தேர்தலில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் விதமாக துண்டறிக்கைகள் இதன்போது விநியோகிக்கப்பட்டன. அத்துடன் கையெழுத்துப்பெறும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன.

யாழ். சமூக செயற்பாட்டு மையத்தின் தலைவர் சுகிர்தராஜன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் ஏ.அகிலன் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கலந்துகொண்டனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply