Home இந்தியா விராட் கோலி இரட்டை சதம் அடித்ததன் மூலம் சாதனை:-

விராட் கோலி இரட்டை சதம் அடித்ததன் மூலம் சாதனை:-

by admin

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தலைவர்  விராட் கோலி இரட்டை சதம் அடித்துள்ளார்.

நேற்றையதினம் டெல்லியில் ஆரம்பமான குறித்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாட்டத்தினை தேர்வு செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 371 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. விராட் கோலி 156 ஓட்டங்களுடன்னும் ரோகித் சர்மா 1 ஓட்டத்துடனும் களத்தில் இருந்தநிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று ஆரம்பமானது.

இந்தநிலையி;ல் விராட் கோலி ஆட்டத்தின் 108 வது ஓவரில் 238 பந்துகளில் இரட்டை சதம் அடித்துள்ளார். இதுவரை அவர் 6 முறை இரட்டை சதங்கள் அடித்துள்ள அவர் இந்த ஆண்டில் இது மூன்றாவது இரட்டை சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் டெஸ்ட்போட்டித் தலைவராக அதிக இரட்டை சதம் அடித்தவர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். முன்னதாக, மே.இ தீவுகள் அணித் தலைவர் லாரா 5 முறை இரட்டை சதம் அடித்ததே சாதனையாக இருந்துள்ளமை குற்ப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More