சினிமா பல்சுவை

இதுதானா சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் பெயர்?


வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என சிவகார்த்திகேயனை வைத்து குடும்ப பாங்கான  படங்களை எடுத்த இயக்குனர் பொன்ராம் இப்பொழுது சிவகார்த்திகேயனை வைத்து தனது மூன்றாவது படத்தையும் இயக்கி வருகிறார். இந்தக் கூட்டணி வழங்கிய இரண்டு படங்களும் ஏற்கனவே    ஹிட்டாகியதனால்    இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன்    சமந்தா   நெப்போலியன், சூரி, சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இமான் இசையமைத்து வரும் இப்படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வருகிறார். ஆர்.டி.ராஜா இந்தப் படத்தையும் தயாரித்து வருகிறார்.

பெயரிடப்படாமல் படப்பிடிப்பு நடந்து வரும்நிலையில் இப்போது  இப்படத்தின் பெயர்  சீமராஜா என கசிந்துள்ளது.  இந்தநிலையில் விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply