Home பிரதான செய்திகள் அயர்லாந்துடனான முதல் ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி

அயர்லாந்துடனான முதல் ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி

by admin

அயர்லாந்து அணியுடனான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 138 ஓட்ட வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றியீட்டியுள்ளது. அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் நேற்றையதினம் சார்ஜா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் ;போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற அயர்லாந்து முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இந்தநிலையில் துடுப்பெடுதாடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 238 ஓட்டங்களைப் பெற்றது. தொடர்ந்து 239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி 31.4 ஓவர்களில் 100 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இதன்மூலம் 138 ஓட்ட வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. நான்கு விக்கெட்கள் வீழ்த்திய ஆப்கான்ஸ்தான் அணியின் முஜீப் சத்ரான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More