இலங்கை பிரதான செய்திகள்

தமிழர் விடுதலை கூட்டணி தலைமையில் உதயமான புதிய கூட்டணி கட்டுப்பணம் செலுத்தியது…

தமிழர் விடுதலை கூட்டணி தலைமையில், நேற்றையதினம் உதயமாகியுள்ள புதிய கூட்டணியனர், யாழ் சாவகச்சேரி நகரசபை தேர்தலில் போட்டியிடுவதற்கென தமது கட்சி சார்பில் கட்டுப்பணத்தை இன்று செலுத்தியுள்ளனர்

அக்கூட்டணியின் சார்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் வல்வெட்டித்துறை முன்னாள் தவிசாளர் அனந்தராஜா முன்னாள் வலி கிழக்கு பிரதேச சபை தவிசாளர் உதயகுமார் ஆகியோர் இன்று காலை தமது கட்டுப்பணத்தினை யாழ் மாவட்ட செயலகத்திலுள்ள மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் உதவித் தேர்தல் ஆணையாளர் அகிலனிடம் செலுத்தி வேட்பாளர் விண்ணப்ப படிவத்தினை பெற்றுக்கொண்டனர்

இதேவேளை முன்னதாக அறிவிக்க்பபட்ட சாவகச்சேரி நகரபை தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் திகதி வரும் 13ம் திகதியுடன் முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளநிலையில் சாவகச்சேரி நகரசபையில் போட்டியிட இதுவரை ஆறு கட்சிகள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதுடன் மாவட்டம் முழுவதிலிமுள்ள பதினேழு சபைகளிலும் போட்டியிடுவதற்கு ஈ.பி.டீ.பி கட்சி மாத்திரம் தற்போதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.