இலங்கை பிரதான செய்திகள்

வல்லை – அச்சுவேலி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் படுகாயம்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வல்லை – அச்சுவேலி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பருத்தித்துறை பகுதியை சேர்ந்த தவகுலரட்னம் பிரசாந்த் (வயது 24) எனும் இளைஞரே படுகாயமடைந்தவராவர்.

குறித்த இளைஞர் இன்று வியாழக்கிழமை காலை தந்து வீட்டில் இருந்து அலுவலகம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை கன்ரர் ரக வாகனத்துடன் விபத்துக்கு உள்ளாகியுள்ளார்.

அதனை தொடர்ந்து விபத்துக்குள்ளான இளைஞரை அப்பகுதியில் நின்றவர்கள் மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்தனர்.  சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை அச்சுவேலி காவல்துறையினர்; மேற்கொண்டு வருகின்றனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply