உலகம் பிரதான செய்திகள்

ஸ்கொட்லாந்தில் கடும் குளிரான காலநிலை ஏற்படும் என மஞ்சள் எச்சரிக்கை


ஸ்கொட்லாந்தில் கரோலின் புயல் தாக்கத்துடன் கடும் குளிரான காலநிலை   ஏற்படும் எனவும் இதன் காரணமாக, வீதி ,புகையிரத  மற்றும் படகு போக்குவரத்து சேவைகள்   பாதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.    குறிப்பாக  இன்றையதினம் புயலுக்கான வாய்ப்பிருப்பதனால் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு   விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாளை  வெள்ளிக்கிழமையும் நாளை மறுதினம்  சனிக்கிழமையும்  கடும் பனிபொழிவு ஏற்படுவதுடன்   கடுமையான  காற்று வீச்க்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாடு சவாலான காலநிலையை எதிர்க்கொண்டு வருவதாக ஸ்கொட்லாந்து போக்குவரத்து அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  சில பகுதிகளில் பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers