குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கட்டலோனிய மக்கள் சுதந்திரம் வேண்டி பிரசல்ஸில் போராட்டமொன்றை நடத்தியுள்ளனர். ஸ்பெய்னிடமிருந்து கட்டலோனியாவிற்கு சுதந்திரம் வழங்கப்பட வேண்டுமெனக் கோரி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. சுதந்திரம் வேண்டி சுமார் 50000 பேர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. பலர் ஸ்பெய்னிலிருந்து பிரசல்ஸிற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
குற்றவாளிகளுக்கு இவ்வளவு ஆதரவு கிடைக்காது எனவும், தாம் அனைவரும் ஜனநாயகவாதிகள் எனவும் கட்டலோனியாவின் முன்னாள் ஜனாதிபதி பூஜ்டியமோன்ட் (Puigdemont ) போரட்டக்காரர்கள் மத்தியில் உரையாற்றிய போது தெரிவித்துள்ளார். கட்டலோனியாவில் பதவி விலக்கப்பட்ட ஜனாதிபதி பெல்ஜியத்தில் சரணாகதி அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment