இலங்கை பிரதான செய்திகள் முஸ்லீம்கள்

ட்ராம்பின் தீர்மானத்திற்கு இலங்கை முஸ்லிம் பேரவை எதிர்ப்பு


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பின் தீர்மானத்திற்கு இலங்கை முஸ்லிம் பேரவை கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. ஜெருசெலேமை இஸ்ரேலின் தலைநகராக ஏற்றுக் கொள்வதாக அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ராம்ப் அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பு தொடர்பில் உலகின் பல பகுதிகளிலிருந்தும் கடுமையான எதிர்ப்புக்களும் விமர்சனங்களும் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், குறித்த அறிவிப்பிற்கு இலங்கை முஸ்லிம் பேரவையும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் முஸ்லிம் பேரவை, இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் ஊடாக அமெரிக்க ஜனாதிபதி ட்ராம்பிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.

ட்ராம்பின் இந்த அறிவிப்பு பலஸ்தீனத்தில் பெரும் சிக்கல்களை உருவாக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த தீர்மானம் முற்று முழுதாக சட்டத்திற்கு விரோதமான ஓர் தீர்மானம் என தெரிவித்துள்ளது. ட்ராம்பின் தீர்மானத்தை பெரும்பான்மையான அமெரிக்கர்கள் எதிர்ப்பார்கள் என நம்புவதாக முஸ்லிம் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply