குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நெதர்லாந்திலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர் ஒருவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலியான பிரான்ஸ் கடவுச்சீட்டு ஒன்றை பயன்படுத்தி கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக துருக்கி, நெதர்லாந்து பயணம் செய்த நபர் ஒருவரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
இந்த நபரை கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்திருந்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மினுவன்கொட நீதிமன்றில் முன்னிலைப்படுத்ப்;பட்டார். இதன் போது குறித்த சந்தேக நபருக்கு 10,000 ரூபா ரொக்கம் மற்றும் ஒரு லட்சம் ரூபா சரீரப் பிணை ஆகியனவற்றின் அடிப்படையில் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மினுவன்கொட நீதவான் சிலானி சதுரந்தி பெரேரா இந்த இவ்வாறு பிணை வழங்கியிருந்தார். எனினும் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாத காரணத்தினால் சந்தேக நபரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
Add Comment