இலங்கை பிரதான செய்திகள் விளையாட்டு

கிளிநொச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டி


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள  மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப்போட்டிகள்இன்று வெள்ளிக்கிழமை (08.12.2017 ) காலை8.30 மணிக்கு மாவட்டகூட்டுறவாளர் மண்டப வளாகத்தில் வட மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின்     கிளிநொச்சி மாவட்ட  அலுவலகத்தினால்  நடத்தப்பட்டது.

மாவட்ட அலுவலர் வே.தபேந்திரன் தலைமையில் நடைபெறற்றது.  நிகழ்வில் பிரதேசசெயலக பிரிவுகளில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் முதலாம், இரண்டாம்,     மூன்றாம் இடங்களைப் பெற்றவர்கள் கலந்து கொண்டனர்.

நடமாட முடியாத நபர்களுக்கான முச்சக்கர வண்டி ஓட்டம் ,     விழிப்புலனற்றவர்களுக்கான பலூன் ஊதி உடைத்தல், செயற்கை கால்பொருத்தியவர்களுக்கான வேகநடை , காது கேளாத வாய் பேசாத நபர்களுக்கான 100
மீற்றர் ஓட்டம், நீர் நிரப்புதல் போன்ற போடடிகள் ஆண் ,பெண் பிரிவாக நடைபெற்றது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers