குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்டிருக்கும் குழப்பமான சூழல் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக வடமாகாண மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். இன்று மாலை அனந்தி சசிதரனால் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கின்ற தெரிவு செய்யப்பட்ட வறுமையான நிலையில் உள்ள பத்து மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் , கூட்டமைப்புக்குள் தற்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகள் குறித்து அமைதியாக இருந்து அவதானித்துக்கொண்டு இருப்பதாக தெரிவித்த அவர் இந்த குழப்பமான சூழல் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார் மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிளவை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன் நிகழ்வில் கிளிநொச்சி வலயக்கல்விப் பணிப்பாளர் குயின்சன் ,கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய ஆசிரியர்கள் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்
Add Comment