உலகம் பிரதான செய்திகள்

கலிபோர்னியா காட்டுத்தீ – 439 வீடுகள் – கட்டிடங்கள் அழிவு – 2 லட்சம் மக்கள் வெளியேற்றம்


அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் சாண்டியாகோ, சாண்டா அனா உள்ளிட்ட பகுதிகளில் காட்டுத் தீ வேகமாக பரவி வருவதனால்  அப்பகுதியில் உள்ள 439 வீடுகள் மற்றும் கட்டிடங்கள் தீயில் எரிந்து அழிவடைந்துள்ளன. இதன்காரணமாக  பல லட்சம் பெறுமதியுள்ள  பொருட்கள் அழிவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   மேலும் லொஸ்ஏஞ்சல்ஸின் வட கிழக்கில் உள்ள வெஞ்சுரா கண்ட்ரி பகுதியில் 466 சதுர கிலோ மீற்றர்  பரப்பளவு காட்டுத் தீயினால் தொடர்ந்தும் எரிந்து கொண்டிருக்கின்றது.

இந்த  காட்டுத் தீ காரணமாக காட்டுப்பகுதியை அண்மித்துள்ள லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து சுமார்  வரை வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் சாண்டியாகோவில் அமைந்துள்ள பந்தய குதிரைகள் பயிற்சி மையத்தில்  உள்ள     15 பந்தய குதிரைகள்   தீயில் சிக்கி உயிரிழந்துள்ளன.   கட்டுக்கடங்காமல் எரிகின்ற தீயினை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படை வீரர்கள் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap