குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பாராளுமன்ற உறுப்பினர்கள் மடிக்கணனிகளை பயன்படுத்துவதில்லை என தெரிவிக்கப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அண்மையில் மடிக் கணனிகள் வழங்கப்பட்டிருந்தன. எனினும் இந்த மடிக் கணனிகள் பயன்படுத்தப்படுவதில்லை என அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சுமார் 20 வீதமான பாராளுமன்ற உறுப்பினர்கள் மடிக்கணனிகளை பயன்படுத்துவதில்லை என தெரிவித்துள்ளார்.
சீன அரசாங்கத்தினால் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மடிக் கணனிகள் வழங்கப்பட்டிருந்தது.
எனினும் இந்த மடிக் கணனிகளை பாராளுமன்ற உறுப்பினர்கள் உரிய முறையில் பயன்படுத்துவதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add Comment