இலங்கை

கிராமங்களில் சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள் பிளவடைய வேண்டியதில்லை – துமிந்த திஸாநாயக்க


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிராமங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள் பிளவடைய வேண்டியதில்லை என அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். காலியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பிளவடைந்து சென்றவர்கள் பின்னால் செல்வதனை விடவும் சுதந்திரக் கட்சியில் அங்கம் வகிப்போரை ஒன்றிணைப்பதே அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே அனைவரும் இணைந்து செயற்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply