Home இலங்கை யாழ். ஆனைக்கோட்டையில் வீடுபுகுந்து கொள்ளை. – வாள் வெட்டுக்குழு அட்டகாசம்:-

யாழ். ஆனைக்கோட்டையில் வீடுபுகுந்து கொள்ளை. – வாள் வெட்டுக்குழு அட்டகாசம்:-

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-


யாழ்.ஆனைக்கோட்டை பகுதியில் இலக்கதகடுகளை மறைத்தவாறு மோட்டார் சைக்கிள் வந்த கும்பல் ஒன்று வீடொன்றுக்குள் புகுந்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டு தப்பி சென்று உள்ளனர்.

யாழ்.ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 09 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்று உள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது ,

மோட்டார் சைக்கிளில் இலக்க தகடுகளை மறைத்து கட்டியவாறு வந்த கும்பல் குறித்த வீட்டிற்குள் புகுந்து வீட்டில் இருந்தவர்களை வாள்களை காட்டி அச்சுறுத்தி விட்டு, வீட்டில் இருந்த தளபாடங்களை தாம் கொண்டு வந்து இருந்த கைக்கோடரியால் கொத்தி சேதப்படுத்தி அட்டகாசம் புரிந்துள்ளனர்.

அதனை தொடர்ந்து வீட்டில் இருந்த அலுமாரியை கோடரியால் கொத்தி பிளந்து அதனுள் இருந்த 40ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் 5 பவுண் நகை என்பவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் காவற்துறையினருக்கு அறிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மானிப்பாய் காவற்துறையினர் குறித்த வீடு யாழ்ப்பாண காவற்துறை பிரிவுக்குள் அமைந்து உள்ளது என கூறி முறைப்பாட்டை ஏற்காது சென்றனர். அதனை தொடர்ந்து சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவற்துறைக்கு  அறிவிக்கப்பட்டதை அடுத்து யாழ்ப்பாண காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More