சினிமா

சிறந்த நடிகர், நடிகைகளுக்கான பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா

2017-ம் ஆண்டில் இந்திய அளவில் சிறந்த நடிகர், நடிகைகளுக்கான  பட்டியலில் முதல் 10  இடங்களுக்குள்  பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா இடம் பிடித்துள்ளனர்.  ரசிகர்களின் கருத்துக்களின் அடிப்படையில்   தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் பட்டியலை பிரபல இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ளது.

‘பாகுபலி’ படத்துக்கு பின்னர் பிரபாஸ் அகில இந்திய நடிகர் பட்டியலில் இடம் பிடித்துள்ள நிலையில அவருக்கு அவருக்கு 5-வது இடம் கிடைத்துள்ளது.  இந்த பட்டியலின், முதல் 10 இடங்களில் தென் இந்திய நடிகராக பிரபாஸ் மட்டுமே இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை தென் இந்திய படங்களில் நடிக்கும் நடிகைகளில் தமன்னா, அனுஷ்கா  இருவருக்கும் இடம் கிடைத்துள்ளது.    தமன்னாவுக்கு 4-வது இடமும், அனுஷ்காவுக்கு 8-வது இடமும் கிடைத்துள்ளன.  ஏனைய  இடங்களில் இந்தி நடிகர்கள் ஷாருக்கான், அமீர்கான், சல்மான்கான், ஹிருத்திக் ரோஷன், இர்பான்கான், அனுஷ்கா சர்மா, கத்திரீனா கைப் ஆகியோர் இடம் பிடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Leave a Reply