இலங்கை பிரதான செய்திகள்

என்னுடன் இருந்த சதிகாரர்கள் ஆளும் கட்சியில் இணைந்து கொண்டனர் – மஹிந்த ராஜபக்ஸ


குளோபல் தமிழ்ச்செய்தியாளர்

தம்முடன் இருந்த சதிகாரர்கள் ஆளும் கட்சியில் இணைந்து கொண்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்கத்தரப்பினர் குற்றம் சுமத்துவதனைப் போன்று தமது பக்கம் யாரேனும் வஞ்சர்கள் இருந்திருந்தால் அவர்கள் தற்போது ஆளும் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பொழுது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதில் தமக்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது என குறிப்பிட்டுள்ள அவர் எனினும் ஐக்கிய தேசியக் கட்சியுடனான உறவுகளை சுதந்திரக் கட்சி துண்டித்துக் கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap