
குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நீண்ட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்றம் நேற்றைய தினம் கூடிய போது சில சட்டங்கள் நிறைவேற்றிக் கொள்ளப்பட்டிருந்தன. அதன் பின்னர் பாராளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 23ம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 23ம் திகதி பாராளுமன்ற அமர்வுகள் நடைபெறும் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு கடந்த 9ம் திகதி நடைபெற்றது. வரவு செலவுத் திட்டம் தொடர்பில் கடந்த ஒரு மாத காலமாக விவாதம் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment