இந்தியா பிரதான செய்திகள்

பேரறிவாளனை தற்போதைய சூழ்நிலையில் விடுவிக்க முடியாது – உச்சநீதிமன்றம் :

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் கைதான பேரறிவாளனை தற்போதைய சூழ்நிலையில் விடுவிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சிகிச்சை காரணமாக அவர் சென்னை புழல் சிறைக்கு விரைவில் மாற்றப்படவுள்ள நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேரறிவாளன் சார்பில் உச்சநீதிமன்றில்  தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த மனுவில் வெடிகுண்டில் வைக்கப்பட்ட பட்டரியை தான் வாங்கி கொடுத்தமை நிரூபிக்கப்படவில்லை எனவும்  குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம்  மத்திய அரசு பேரறிவாளனை விடுவிக்க விரும்புகிறதா? இல்லையா? என கேள்வி எழுப்பியதுடன் இது குறித்து 2 வாரத்தில் பதில் அளிக்குமாறும் உத்தரவிட்டிருந்தது.  இந்த வழக்கு   இன்று விசாரணைக்கு வந்தநிலையில்  தற்போதைய சூழலில் சிறையில் இருந்து பேரறிவாளனை விடுவிக்க முடியாது என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

அதேவுளை வெடிகுண்டு தொடர்பான சி.பி.ஐ. சிறப்பு குழுவின் விசாரணை அறிக்கையை பேரறிவாளன் தரப்பிடம் வழங்க உச்சநீதிமன்றம்    அனுமதி வழங்கியுள்ளது

Add Comment

Click here to post a comment

Leave a Reply