Home இந்தியா கூகுளில் அதிகம் தேடப்பட்ட வாசகம் பாகுபலி-2 – பொழுது போக்காளர்களில் சன்னி லியோன்…

கூகுளில் அதிகம் தேடப்பட்ட வாசகம் பாகுபலி-2 – பொழுது போக்காளர்களில் சன்னி லியோன்…

by admin

இந்திய அளவில் இவ்வாண்ட கூகுளில் அதிகம் தேடப்பட்ட சொற்களில் இயக்குணர், ராஜமவுலி இயக்கிய, பாகுபலி-2 திரைப்படம், மொழிகளை கடந்து முதல் இடத்தை பிடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் தேடுதலில் ஒவ்வொரு வருடமும் அதிகம் தேடப்படும் செற்கள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படுவது உண்டு. அவ்வகையில் இந்த வருடம் ஆதிக்கம் செலுத்திய செய்திகள், நிகழ்வுகள் மற்றும் டிரெண்டிங் தொடர்பான பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ளது.

இதனை அடுத்து இந்தியன் பிரீமியர் லீக் என்ற வாசகம் 2வது இடத்திலும், லைவ் கிரிக்கெட் ஸ்கோர் என்ற வாசகம் 3வது இடத்திலும் உள்ளன. இந்த வருடத்திற்கான உயர் பொழுதுபோக்காளர்கள் வரிசையில் சன்னி லியோன் மீண்டும் முதல் இடத்தில் உள்ளார். தொடர்ந்து பிக் பொஸ் போட்டியாளர்கள் ஆர்ஷி கான் மற்றும் சப்னா சவுத்ரி அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். அதற்கு அடுத்த இடத்தில் யூ டியூபில் பாடகி வித்யா வாக்ஸ் உள்ளார்.

இதேபோன்று இந்த வருடத்திற்கான உயர்ந்த மட்ட செய்தி வரிசையில், சி.பி.எஸ்.இ. முடிவுகள், உத்தர பிரதேச தேர்தல், GST. மற்றும் பட்ஜெட் ஆகியவை உள்ளன.

இதுதவிர, எப்படி ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைப்பது, ஜியோ போன் வாங்குவது, ஹோலி வண்ணத்தினை முகத்தில் இருந்து நீக்குவது போன்ற விசயங்களும் லட்சக்கணக்கானோரால் தேடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More