குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இணைக்கும் முயற்சிகளை நாமல் ராஜபக்ஸவும், பிரசன்ன ரணதுங்கவும் தடுக்கின்றார்கள் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் என குறிப்பிட்டுள்ள அவர் கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து செயற்படுவதனை ஜனாதிபதி எதிர்க்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
பெரும்பான்மையான சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் இணைந்து செயற்படவே விரும்புகின்றார்கள் எனவும் எனினும், பிரசன்ன ரணதுங்க மற்றும் நாமல் ராஜபக்ஸ ஆகியோர் மட்டுமே கட்சி இணைவதனை விரும்பவில்லை எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
Add Comment