குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
‘யாழ்ப்பாணம் தனியார் வைத்தியசாலை கண்சத்திர சிகிச்சையில் பாதிக்கப்பட்டோருடன் வைத்தியசாலையின் நிர்வாகம் நடந்துகொண்ட விதம் மனிதாபிமானம் புதைகுழிவெட்டிப் புதைக்கப்பட்டுள்ளமையை வெளிப்படுத்துகின்றது. அரசியல் செல்வாக்கையும் அதிகாரிகளின் துணையுடன் நாம் என்ன என்றாலும் செய்துவிட்டுப் போகலாம் என்ற எண்ணம் அவர்களிடம் உள்ளமையை நாம் பார்க்கலாம் எனத் தெரிவித்த அவர் இந்த விவகாரத்தில் உரிய சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என வடக்கு மாகாண சபையில் அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் தெரிவித்தார்
வடக்கு மாகாண சபையின் 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதத்தின் 3ஆம் நாள் இன்றாகும். மாகாண சுகாதார அமைச்சு அமைச்சுக்கான நிதிஒதுக்கீடு தொடர்பான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்
Spread the love
Add Comment