Home உலகம் ஒபாமாவின் அலுவலக கழிவறையை சுத்தம் செய்வதற்கே தகுதியில்லாதவர் டிரம்ப்

ஒபாமாவின் அலுவலக கழிவறையை சுத்தம் செய்வதற்கே தகுதியில்லாதவர் டிரம்ப்

by admin


அமெரிக்காவின் முன்னணி பத்திரிகையான USA today , அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை கடுமையான சொற்பிரயோகங்ளினூடாக விமர்சித்துள்ளது. பத்திரிகையின் தலையங்கம், மற்றும் விமர்சனத்தில், ஊழல் செனட்டர்களை ஆதரவாளர்களாக வைத்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அந்த பதவிக்கு சிறிதும் தகுதியில்லாதவர் எனத் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின், அலுவலக கழிவறையை சுத்தம் செய்வதற்கோ, முன்னாள் ஜனாதிபதி டபிள்.யு.புஷ்ஷின் காலனிக்கு பொலிஷ் (Shoe polish) போடுவதற்கும் கூட லாயக்கில்லாதவர் என அந்த தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக ஜனவரியில் டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். தேர்தல் பிரசாரத்தின் போதே, அவர் மீது பல பெண்கள், பாலியல் முறைப்பாடுகளை தெரிவித்தார். டிரம்ப் மீதான இந்த முறைப்பாடுகள், தற்போது அமெரிக்காவில் மிகப் பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பெண், நாடாளுமன்ற உறுப்பினர்., கிரிஸ்டன் கில்லிபாராண்ட், டிரம்ப் குறித்து டுவிட்டரில் விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More