இலக்கியம் இலங்கை பிரதான செய்திகள்

வெள்ளை எச்சங்கள் ((WHITE RESIDUSE) கண்காட்சி…

 

வெள்ளை எச்சங்கள் ((WHITE RESIDUSE) எனும் தலைப்பினை கொண்டு 08ஃ12ஃ2017 தொடக்கம் 11ஃ12ஃ2017 வரை சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம் கிழக்கு பல்கலைக்கழகத்தில் (இலங்கை) சந்திரசேகர் அனோஜன் ஆகிய எனது காண்பியற்கலை கண்காட்சி நடைபெற்று முடிந்ததனை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவிப்பதோடு இக்கண்காட்சிக்கு உதவிய பணிப்பாளர் மற்றும் விரிவுரையாளர்கள் நண்பர்களிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். அத்துடன் வருகை தந்த அனைவருக்கும் நன்றிகள் உரித்தாகுக.

எனது இக்காண்பியற்கலை கண்காட்சிக்கு வெள்ளை எச்சங்கள் (WHITE RESIDUSE) எனும் தலைப்பு இடப்பட்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் இறுதியாக இடம்பெற்ற போரின் பிற்பட்ட கால வாழ்க்கையையும், அவர்களது இழப்புக்கள், தேவைகள் என்பனவற்றை சித்தரிக்கும் முகமாக எட்டு ஓவியங்கள் மற்றும் ஒரு தாபனக்கலை என்பன கொண்டு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. அவையாவன NOTICE, MY LAND 01, MY LAND 02, MICRO LOAN, HAPPY LEG, SALES, STICK NO BILLS, INDIRECT என்பவை ஆகும். இவ் காண்பியற் கலைக்கண்காட்சிக்கு வெள்ளை எச்சங்கள் எனும் தலைப்பிட்டதற்குக் காரணமாக, சமாதானம் என்ற கருத்திற்கு வெள்ளை வர்ணத்தையும், அவ் வெள்ளை வர்ணத்தின் மேல் எனது மனதிலுள்ள எச்சங்களான கதைக்கருக்களையும் ஓவியமாக ஆக்கியுள்ளேன். ஓவியத்தளத்தில் முழுமையாக வர்ணங்களைப் பயன்படுத்தாது எனது கதைக்கு தேவையான வர்ணங்களை மட்டும் தேவையான இடங்களில் பிரயோகிப்பதோடு கீழைத்தேயம் அல்லது கிழக்காசிய நாடுகளிற்கு பரீட்சயமான கடும் வர்ணங்களையும், முதன்மை வர்ணங்களான சிவப்பு, மஞ்சள், நீலம் போன்றனவும், கறுப்பையும் உபயோகித்து எனது ஆக்கங்களை தேவைக்கு ஏற்ற போல் ஒழுங்குபடுத்தி உள்ளேன். இதில் நான் உட்பட அனைவரையும் கவர்ந்த விடயமாக LIFE OF KEYS  எனும் கதவுடன் கூடிய சாவிகளின் வாழ்க்கை எனும் தாபனக்கலை காணப்படுகிறது.

இவ் ஆக்கங்களைப் பற்றி எமது நிலம் எனும் தொனிப் பொருளில் நான்கு ஆக்கங்களும்இ ஊனமுற்றோரது தேவைகள் மற்றும் அவர்களது வாழ்க்கை முறை எனும் தொனியில் இரண்டு ஆக்கங்களும், சிறுகடன் இபொருளாதார சுரண்டல், மறைமுக வாள்வெட்டு இபோதைப்பொருள் அடிமையாக்கம் மற்றும் மறைமுக இன அழிப்பு எனும் ஓவியத்தையும்இ இடம்பெயர் மற்றும் புலம்பெயர் மக்களின் நினைவுகளாக தாபனக்கலை ஒன்றையும் உள்ளடக்கியுள்ளேன்.

LIFE OF KEYS 

 

இது கதவுடன் கூடிய சாவிகளின் வாழ்க்கை (டுஐகுநு ழுகு முநுலுளு ) எனும் தாபனக்கலை ஆகும் . இடம்பெயர் மற்றும் புலம்பெயர் மக்களிடம் நினைவுகளாக உள்ள சாவிகளின் தொகுப்பாகவும் அவர்களது நினைவலைகளை தூண்டும் ஓர் காட்சிப்பொருளாகவும் அமைந்துள்ளது.

காணாமல் போன மனிதர்களையும் போரினால் மக்கள் தொலைத்த எண்ணில் அடங்கா நினைவுகளையும் அவர்களது உடைமைகளையும் கொழும்பில் அமைக்கப்படும் காணாமல் போனோரை தேடும் பணியகத்தினை வடக்கு மற்றும் கிழக்கிலே அமைக்கக் கோரியும் வலியுறுத்துவதாக அமைகிறது.

MY LAND 01

பொதுவாக நிலம் சார்ந்த ஆக்கங்களில் நான் வலியுறுத்த விளைவது போரின் பிற்பட்ட காலங்களில் மக்கள் எதிர்நோக்கிய நிலம் சார்ந்த பிரச்சனைகள் என்பனவாகும். உதாரணமாக கேப்பாபிலவு இயாழ்ப்பாணம் (பலாலி) போன்ற பெரிதளவாக கண்ணுக்கு புலப்படும் நிலங்களை விடுவிக்க கூறி நடைபெற்ற போராட்டங்களையும்இ அவர்களிற்கு நடைபெற்ற துயரங்களையும் உதாரணமாகக் கொண்டு இவ் ஓவியத்தினை எண்ணெய் வர்ணம் கொண்டு கன்வஸ் துணியில் 24 ‹36 அங்குலம் ஆக வரைந்துள்ளேன். பிண்ணனியில் எமது நிலத்தின் வளங்களையும்இ பெண்களின் கொடுமை நிறைந்த வாழ்க்கையினையும்இ அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளால் உதவிகள் வழங்கப்படுவதாக கூறப்பட்டு ஏமாற்றப்பட்ட நிலைமையினையும்இ அங்கு இடம்பெற்ற பெண்களது வன்முறைகள் சம்மந்தமான விடயங்களையும் விளக்குவதாக உள்ளது.

MY LAND 02

அடைபட்ட சூழலில் எமக்கு சுதந்திரம் கிடைத்து விட்டது என எண்ணி வாழும் எங்களை சுதந்திரம் எனும் பெயரில் கட்டி வைத்திருக்கும் பல அரசியல் காரணிகளை உதாரணம் காட்டி இவ் ஆக்கத்தினை படைத்துள்ளேன். குண்டுகள் வீசி எரிக்கப்பட்ட தேசம் என்பதைக் காட்ட எரித்தும்இ கிழித்தும் காட்டியுள்ளேன். பெட்டி ஒன்றில் நூலினால் கட்டுண்ட போல் காட்டியிருப்;பது எங்களை சுதந்திரம் என்ற போர்வையில் அடைத்து வைத்திருப்பதையும்இ நாங்கள் அடக்கு முறைக்குள் வாழ்வதையும் எண்ணெய் வர்ணம் மற்றும் நூல் என்பனவற்றை கொண்டு 24 ‹ 36 அங்குலத்தில் ஆக்கியுள்ளேன்.

NOTICE

இவ்; ஓவியம் மூலம் எமது பிரதேசத்தின் அடக்கு முறைகளினையும் எண்ணெய் வர்ணம் மற்றும் பேப்பரினை கொண்டு ஒட்டி ஆக்கியுள்ளேன். இது 25. 5 ‹ 30. 5 எனும் அங்குல அளவினைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. மறைமுக நில சுரண்டல்இ இன்னும் அகதிகளாக வாழும் நாம்இ பல அரசியல் காரணிகளினால் முடங்கிக் கிடக்கும் எமது சமூகம் என்பவற்றை வெளிக்காட்டியுள்ளேன்.

 

 

STICK NO BILLS

 

 

 

 

 

 

 

இவ் ஓவியம் அக்றலிக் வர்ணம் கொண்டு வரையப்பட்டது. இவ் ஓவியம் கடந்த கால கட்டங்களில் போரின் தேவைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட நிலங்கள் விடுவிக்கப்பட்டும், விடுவிக்கப்படாமலும் இருப்பதனை அறிவோம். இவ் பகிரங்க செயற்பாட்டினை மறைக்கும் முகமாகவும் தற்போது பிறநாடுகளிற்கு தெரியாமல் மறைமுகமாக நிலங்களை அடைய எடுக்கப்படும் சில வழிமுறைகள் பற்றி விளக்க இவ்வோவியத்தை வரைந்துள்ளேன். கிறிஸ்தவர்களுடன் சேர்த்து இந்துக்களது பெருமளவான நிலங்கள் மறைமுகமாக பறிக்கப்படுவதும, மாங்குளம் மற்றும் வட்டுவாகல் எனும் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள விகாரைகளினது தேவை என்ன என்பதனையும்ம, றைமுக நில சுரண்டலையும் விளக்குவதற்காகவும் இவ்வோவியத்தினை வரைந்துள்ளேன்.

MICRO LOAN

சிறுகடன் உதவிகளை தனியார் நிறுவனங்கள் வடக்குமற்றும் கிழக்கில் வழங்கி வருகின்றது. இதன் மூலம் அதிகளவான பெண்கள் குறிப்பாக குடும்ப பெண்கள் இக்கடனை கணவனுக்கு தெரியாமலும் தெரிந்தும் பெற்று கடனை மீள செலுத்த முடியாத நிலையில் தற்கொலை செய்யும் செயற்பாடுகளை நாம் கண் முன் காண்கின்றோம். (செய்தி தனது இரு குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்றுவிட்டு தானும் இறந்து போன தாய்) இவ்வாறான செயற்பாடுகளும் மறைமுகமாக நாம் எமது பொருளாதாரத்தை இழக்கும்இ மாதத்தவணை அடிப்படையில் பெறப்படும் வாகனங்களிற்கு பணத்தினை மீள செலுத்த முடியாமல் வாகனங்களையும்;இ தங்க நகைக்கடன் எனும் பெயரில் நம்மிடம் இருக்கும் நகைகளை அதிக வட்டிக்கு வைத்து அதனை இழக்கும் நிலையையும் குறித்து இவ்வோவியத்தை ஆக்கியுள்ளேன். கஷ்டத்தின் மத்தியில் தெரிந்தே நாம் ஓர் குழியில் விழுந்து எதிர்கால வாழ்க்கையை தொலைப்பதனை எனது கண்ணூடாக பார்க்கிறேன். இவ்வாறான சிறுகடன் உதவிகளை ஏன் அரசாங்கம் வழங்கக் கூடாது என்பதனை வலியுறுத்துவதாக வரைந்துள்ளேன்.

 

HAPPY LEG

சந்தோசமான கால்கள் எனும் ஓவியம் பிறப்பிலேயே மற்றும் போரின் மூலம் பாதிக்கப்பட்ட விசேட தேவையுடையோர் மற்றும் அங்கவீனமானவர்களிற்கு இருக்கின்ற சந்தோசமான மற்றும் துக்கமான பக்கங்களை வெளிக்காட்டும் முகமாக இவ்வோவியத்தினை 36 ‹ 48 எனும் அளவில் வரைந்துள்ளேன். வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் அவர்களிற்கு வழங்கப்படும் சிறு உதவிகளை ஏன் அரசாங்கம் செய்யக்கூடாது எனவும்இ அவர்களது எண்ணிக்கையை கணக்கிட்டு சிறுகடன் சிறுதொழில் வசதிகளை அமைத்து தரக்கோரியும்இ அவர்களின் துக்கமான பகுதியினை துடைத்து சந்தோசமான வாழ்க்கைக்கு வலியுறுத்தியும் வரைந்துள்ளேன்.

 

 

 

 

 

 

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 13 other subscribers