இலங்கை பிரதான செய்திகள்

இலங்கையின் நிலைப்பாட்டை ஏனைய நாடுகளும் பின்பற்ற வேண்டும்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நிலக்கண்ணி வெடி தொடர்பில் இலங்கையின் நிலைப்பாட்டை ஏனைய நாடுகளும் பின்பற்ற வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலக்கண்ணி வெடிகளுக்கு எதிரான சர்வதேச பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட்டிருந்த நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

நிலக்கண்ணி வெடிக்கு எதிரான சர்வதேச பிரகடனத்தில் கைச்சாத்திடாத ஏனைய நாடுகளும் இலங்கையை பின்பற்றி கைச்சாத்திட வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் கோரியுள்ளது. நிலக்கண்ணி வெடிகளுக்கு எதிரான சர்வதேச பிரகடனத்தில் கைச்சாத்திட்ட 163ம் நாடாக இலங்கை பட்டியலில் இணைந்து கொண்டுள்ளது.

1997ம் ஆண்டில் நிலக்கண்ணி வெடிகளுக்கு எதிரான ஒட்டாவா பிரகடனம் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. எனினும், யுத்தம் காரணமாக தற்போதே இலங்கை இந்தப் பிரகடனத்தில் கைச்சாத்திட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.