இந்தியா பிரதான செய்திகள்

திருவண்ணாமலை கோவிலின் ஆசிரமம் ஒன்றின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் பலி


இன்று திருவண்ணாமலை கோவிலில் கிரிவலப்பாதை விரிவாக்கப் பணியின் போது ஆசிரமம் ஒன்றின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

திருவண்ணாமலையில் உள்ள ரமணா ஆசிரமத்தின் சுவரே இன்று திடீரென இடிந்து விழுந்ததில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. நேற்றையதினம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் பிரகார மண்டபம் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.

இந்தநிலையில் திருவண்ணாமலையில இன்று இந்த விபத்து ஏற்பட்டதனைத் தொடர்ந்து கோவில்களில் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply