Home உலகம் இளவரசர் ஹரிக்கும் மெகான் மெர்கலுக்கும் அடுத்த ஆண்டு மே 19ம் திகதி திருமணம்:-

இளவரசர் ஹரிக்கும் மெகான் மெர்கலுக்கும் அடுத்த ஆண்டு மே 19ம் திகதி திருமணம்:-

by admin

பிரித்தானிய இளவரசர் ஹரிக்கும் அவரது காதலியான மெகான் மெர்கலுக்கும் அடுத்த ஆண்டு மே மாதம் 19ம் திகதி திருமணம் நடைபெற உள்ளதாக கென்சிங்டன் அரண்மனை இன்றையதினம் அறிவித்துள்ளது.

பிரித்தானிய அரியணை வரிசையில் ஐந்தாவதாக அமரவுள்ள இளவரசர் ஹரி கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து அமெரிக்க நடிகையான மெகான் மெர்கலை காதலித்து வந்தார். கடந்த மாதம் இவர்கள் நிச்சயதார்த்தத் செய்து கொண்டுள்ளநிலையில் தற்பொழுது திருமணத் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது

திருமணம் விணனட்சர் மாளிகையில் உள்ள புனித ஜோர்ஜ் சப்பலில் இடம்பெறும் எனவும் திருமணத்திற்காக பிரம்மாண்ட வரவேற்பு மற்றும் இசை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இளவரசர் ஹரி திருமணத்தின் பின்னர் லண்டனில் உள்ள கென்சிங்டன் அரண்மனையில் உள்ள நொட்டிங்ஹாம் மாளிகையில் வசிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More