சினிமா

எனக்கு கிடைக்காதது என் மகளுக்கு கிடைத்துள்ளது :

தனக்கு கிடைக்காதது தன் மகளுக்கு கிடைத்துள்ளதென நடிகை மீனா மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார். மலையாள இயக்குனரான சித்திக் இயக்கிய பிரண்ட்ஸ் படத்தில விஜய், சூர்யாவுடன் தேவயானியும் நடித்திருந்தார். இதில் தேவயானி நடித்த வேடத்தில் நடிக்க முதலில் மீனாவை தான் இயக்குனர் சித்திக். அழைத்திருக்கிறார் . ஆனால் அந்த நேரத்தில் மீனா வேறு சில படங்களில் மீனா நடித்துக் கொண்டிருந்ததனால் அந்தப்படத்தில் நடிக்க முடியவில்லையாம். அதன்பிறகும் சித்திக் இயக்கத்தில் நடிப்பதற்கான சந்தர்ப்பம் மீனாவுக்கு அமையவில்லை என்பதால் அவருக்கு சற்றும் வருத்தமாக இருந்ததாம்.

இந்நிலையில், தற்போது மீனாவின் மகளான தெறி பேபி நைனிகா, பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற பெயரில் சித்திக் இயக்கியுள்ள படத்தில் நடித்திருக்கிறார். பிரண்ட்ஸ் படத்தில் சித்திக் இயக்கத்தில் நடிக்க முடியாமல் போனதை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டதாகவும் ஆனால் இப்போது தன் மகள் அவரது பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தானே சித்திக் படத்தில் நடித்தது போன்று உணர்வதாகவும் மீனா தெரிவித்துள்ளாராம். அரவிந்த்சாமி, அமலா போல், பேபி நைனிகா, மாஸ்டர் ராகவன் மற்றும் பலர் நடித்திருக்கும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் விரைவில் வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளனர். மலையாளத்தில் பிரபலமான பாஸ்கர் தி ராஸ்கல் படத்தின் ரீமேக்தான் இந்தப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply