உலகம் பிரதான செய்திகள்

சவூதி அரேபியாவில் பெண்களுக்கு மோட்டார் சைக்கிள் – பாரவூர்தி ஓட்டவும் அனுமதி

சவூதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட விதிக்கப்பட்ட தடை அண்மையில் நீக்கப்பட்டுள்ள நிலையில் மோட்டார் சைக்கிள், பாரவூர்திகள் ஓட்டவும் தற்போது பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சவுதி அரேபியா நாட்டின் போக்குவரத்து துறை இயக்குனர் ஜெனரலினால்; நேற்றையதினம் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது

சவுதிஅரேபியாவில் ஷரியத் சட்டம் கடை பிடிக்கப்படுவதனால் அங்கு பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி மறுக்கப்பட்டு இருந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 1990-ம் ஆண்டுகளிலிருந்தே பெண் உரிமை அமைப்புக்கள் போராட்டங்கள் மேற்கொண்டு வந்தன.

இந்த நிலையில் பெண்கள் கார் ஓட்ட விதித்திருந்த தடையை நீக்கியதுடன் 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளித்து மன்னர் முகம்மது பின் சல்மான்; கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில், காரை தொடர்ந்து மோட்டார் சைக்கிள், பாரவூர்திகள் ஓட்டவும் பெண்களுக்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  ஓட்டுனர் உரிமம் இருபாலருக்கு பொருத்தம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் மோட்டார் சைக்கிள், பாரவூர்திகள்; ஓட்டவும் பெண்களுக்கு உரிமம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் ஓட்டும் வாகனங்களின் இலக்கத்தகடுகள்; வித்தியாசமானதாக இருக்கும் எனவும் போக்குவரத்து விதிகளை மீறும் பெண்கள் மற்றும் விபத்துகளை ஏற்படுத்தும் பெண் சாரதிகளை தண்டிப்பதற்கும், அபராதம் விதிப்பதற்கும் பெண்களால் நிர்வகிக்கப்படும் தனி அமைப்பு உருவாக்கப்படும் எனவும் போக்குவரத்து துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.