
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மியன்மாரில் ரொய்டர்ஸ் ஊடகவியலாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டமையை எதிர்த்து அந்நாட்டு ஊடகவியலாளர்கள் போராட்டமொன்றை நடத்த உள்ளனர். கறுப்பு ரீசேர்ட்டுகளை அணிந்து தமது எதிர்ப்பை வெளியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். நாட்டின் உத்தியோகபூர்வ இரகசிய சட்டத்தை மீறிச் செயற்பட்டதாகத் தெரிவித்து இவ்வாறு இரண்டு ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதிலும் உள்ள ஊடகவியலாளர்கள் இந்தப் போராட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வமாக போராட்டங்களை நடத்தி ஊடகவியலாளர்களை விடுதலை செய்ய வேண்டி வழிபாடுகளில் ஈடுபட உள்ளதாகவும் ஊடகவியலளார்கள் தெரிவித்துள்ளனர்.
Spread the love
Add Comment