உலகம் பிரதான செய்திகள்

பாகிஸ்தானில் தேவாலயத்தை குறிவைத்து தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 7 பேர் பலி


பாகிஸ்தானின் குவெட்டா நகரில் உள்ள பெத்தேல் கத்தோலிக்க தேவாலயத்தை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்ததாகவும், இரு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கத்தோலிக்க திருச்சபையின் கீழ் செயல்படும் இந்த தேவாலயத்தில் இன்று பிராத்தனைக்காக சுமார் 400-க்கும் மேற்பட்டோர் கூடியிருந்த வேளையில் இரு தற்கொலைத் தீவிரவாதிகள் இன்று தேவாலத்துக்குள் உட்புக முனைந்துள்ளனர்.

இந்தநிலையில் அவர்களை தடுப்பதற்காக காவல்துறையின் முற்பட்ட வேளை , தேவாலயத்தின் வாசலில் ஒரு தீவிரவாதி வெடிகுண்டை வெடிக்க வைத்ததாகவும் மற்றொரு தீவிரவாதி துப்பாக்கியால் மக்களை நோக்கி சுட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கியால் தாக்குதல் நடத்திய தீவிரவாதியை காவல்துறையினர் சுட்டுக்கொன்றதாகவும் இந்த தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டதுடன் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதானவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.