இந்தியா பிரதான செய்திகள்

உலகில் அதிகம் புலம்பெயர்பவர்கள் இந்தியர்கள்…

உலகில்  இந்தியர்களே வெளிநாடுகளுக்கு அதிகம் புலம்பெயர்ந்துள்ளதாக ஐக்கியநாடுகள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி 1.5 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் வளைகுடா நாடுகளிலும் ஏனைய பிற வெளிநாடுகளிலும் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு செல்லும் இந்தியர்கள் அதிகமாக சவூதி போன்ற வளைகுடா நாடுகளையும், அமெரிக்காவையும், ஆசிய நாடுகளான சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளை அதிகம் விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு நிலவரப்படி உலகம் முழுவதும் 243 மில்லியன் மக்கள் வெளிநாட்டில் வசிப்பதாகவும் இதில் மொத்தம் 6 சதவிகித மக்கள் இந்தியர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2010ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2015ல் வெளிநாட்டிற்கு குடியேறியவர்களின் எண்ணிக்கை 10 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்களின் 30 பேரில் ஒருவர் அந்த நாட்டை சேராதவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகத்தில் இருக்கும் புலம்பெயர் மக்களில் 50 சதவிகிதமானோர் ஆசியாவை சேர்ந்தவர்கள் எனவும் இரண்டாவதாக மெக்சிகோ உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

2010ல் 3.2 சதவிகிதமாக இருந்த இந்தியாவில் இருந்து வெளிநாட்டிற்கு சென்றவர்களின் சதவிகிதம 2015ல் அதேபோல் 3.3 சதவிகிதமாக மாறாமல் இருக்கிறது. 1970ல் இருந்து மக்கள் அதிகமாக அமெரிக்கா செல்வதாகவும் அங்கு மட்டும் 46.6 மில்லியன் மக்கள் புலம்பெயர்ந்து உள்ளனர் எனவும் இதில் 2 மில்லியன் மக்கள் இந்தியர்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply